Aran Sei

பாஜக ஆட்சியில் ஒட்டுக்கேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் – குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட மகாராஷ்டிரா அரசு

காராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான பாஜக ஆட்சியின் போது,  தொலைபேசி உரையாடல் கண்காணிக்கப்பட்டது குறித்து விசாரிக்க அம்மாநில அரசு மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரியருக்கு அதரவாக  முகநூலில் பதிவிட்ட ஆய்வு மாணவர் – நிறுவனத்தை விட்டு வெளியேற்றிய கவுஹாத்தி ஐஐடி நிர்வாகம்

கடந்த வாரம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அம்மாநில உள்துறை அமைச்சர் திலிப் வால்ஸ் படேல், கடந்த ஆட்சியில் அரசியல் எதிரிகளை ஒட்டுக்கேட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இந்நிலையில், மாநில அரசின் உத்தரவின் படி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநில காவல்துறை ஆணையர், மாநில புலனாய்வுத் துறை ஆணையர், கூடுதல் காவல் ஆணையர்(சிறப்பு பிரிவு) ஆகிய அதிகாரிகளின் கீழ் இந்தக் குழுவை நியமித்துள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

மேலும், கடந்த 2014-2019 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து, இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா பட்டோல், “கடந்த 2016 ஆம் ஆண்டு தனது தொலைபேசியும் அம்ஜத் கான் என்பவரால் கண்காணிப்பிற்கு உள்ளானது, அவரிடம் கேட்ட போது போதை மருந்து விவகாரம் தொடர்பாக உயர்அதிகாரிகள் கண்காணிக்க கூறியதாக தெரிவித்தார்” என்று அவர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் தி இந்து செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்