Aran Sei

சமூக விலக்கம் செய்யப்பட்ட பௌத்தக் குடும்பங்கள்: பட்டியலினத்தோர் பௌத்தம் மாறினால் தீண்டாமை ஒழிந்திடுமா?

காராஷ்டிரா மாநிலம் நாந்தட் மாவட்டத்தின் மொட்கெட் தாலுகாவில் உள்ள ரோஹி பிம்பல்கான் கிராமத்தில் மராத்தா மக்களால் சமூக புறக்கணிப்பு உள்ளாகியுள்ள 30 பௌத்தக் குடும்பங்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வருடாந்திர பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது பாபாசாகேப்  அம்பேத்கரைப் பாராட்டியதற்காக 30 பௌத்த குடும்பங்களை, அதே கிராமத்தைச் சேர்ந்த   400 க்கும் மேற்பட்ட மராத்தா குடும்பங்கள் சமூகம் புறக்கணிப்பு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம உள்ளூர் பஜார், மளிகைக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் பால் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்க கூடாதென்று மராத்தா குடும்பங்கள் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’வகுப்புவாத கலவரத்தில் ஈடுபட்டாரென குற்றஞ்சாட்டப்பட்ட யோகேஷ் ராஜ்’ – உத்திரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி

பல சாதி எதிர்ப்பு அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த அழுத்தத்தைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தி வயர் கூறியுள்ளது.

ஏப்ரல் 25 அன்று,  பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் சேர்ந்த பல பட்டியல்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்  கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டத்தைத் முடிந்து கிராமவாசிகள் கலைந்து சென்றபோது, பட்ட்சியல் சமூகத்திலிருந்து அபுத்தத்திற்கு மாறிய அனைவரும் பாபாசாகேப்  அம்பேத்கரைப் பாராட்டிக் கோஷங்களை எழுப்பியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபாசாகேப்  அம்பேத்கரின் பிறந்த நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையால் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த முறை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மாநிலம் முழுவதும் மிகவும் சிறிய அளவில் நடத்தப்பட்டன.

பிஎம் கேர்ஸிற்கு நிதி அளிப்பதாக உறுதியளித்த ஆஸ்திரேலிய வீரர்: 37 லட்சத்தை யுனிசெப் அமைப்பிடம் வழங்கியுள்ளார்

அம்பேத்கரின் படமும் அவருக்கு அளிக்கப்படும் பொது மரியாதையும் மராத்தா சமூகத்தைக் கோபப்படுத்தியது என்று ரோஹி பிம்பல்கானை சேர்ந்த 18 வயது இளைஞர் கரண் கெல்கர் கூறியுள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 27 அன்று, மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 30 க்கும் மேற்பட்ட ஆண்கள், கெல்கர் மற்றும் மூத்த குடிமகன் அஹில்யாபாயை வளைத்து, அவர்கள்மீது சாதிய வன்சொற்களால் வசைபாடியதோடு கெல்கரை அறைந்தனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) கெல்கர் புகாரைபதிவு செய்ய முயன்றபோது, மொட்கெட் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் தயங்கியுள்ளனர்.  பின்னர் மாவட்ட பீம் இராணுவத்தின் (Bhim army) பிரிவு தலையிட்ட தலையிட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்ததாக தி வயர் கூறியுள்ளது.

இந்தியாவில் ஃபைசர் தடுப்பு மருந்து – அனுமதிக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ஆல்பர்ட் போர்லா தகவல்

வன்கொடுமைதடுப்பு (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அறியப்பட்ட மற்றும் பல அறியப்படாத நபர்களுக்கு எதிராக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆருக்கு எதிர்வினையாக, மராத்தா சமூகம் தலித் குடும்பங்களைப் புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறிய பீம் ராணுவத் தலைவர் ராகுல் பிரதான் “மளிகைக் பொருட்களுடன்  தகனம் செய்வதற்கான மரக்கட்டைகளை ஆதிக்க சாதியினர் மறுத்தனர்,” என தெரிவித்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

இக்கிராமம் ஒரு சமூக புறக்கணிப்பை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. 2001ல் இதே போன்ற சம்பவம் நடந்ததை கிராமவாசிகள் நினைவுகூர்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அம்மா உணவகத்தைத் சேதப்படுத்திய திமுகவினர்’ – சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் கட்சியிலிருந்து நீக்கவும் ஸ்டாலின் உத்தரவு

நந்த்ட் போலீஸ் கண்காணிப்பாளர் பிரமோத்குமார் ஷெவாலே, “மாநிலத்தில் நடந்து வரும் முடக்கத்திற்கு கிராமத்தின் சமூக புறக்கணிப்பு தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நிலைமை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்” என தெரிவித்துள்ளார்.

“இந்தச் சம்பவம் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட நிர்வாகம் ஒரு குழுவைக் கிராமத்திற்கு அனுப்பியது. நிலைமை அதிகரிக்காது என்பதை நாங்கள் உறுதி செய்தோம்” ஷெவாலே தெரிவித்துள்ள்தாக தி வயர் கூறியுள்ளது.

“இது முற்றிலும் ஒரு சமூக புறக்கணிப்பு அல்ல. ஏற்கனவே கிராமத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. அது ஒரு சமூக புறக்கணிப்பு என்று தவறாக கருதப்பட்டது.” என பிரமோத்குமார் ஷெவாலே கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்