Aran Sei

போதைப் பொருள் வழக்கில் நண்பர்களை சாட்சியமாக பயன்படுத்த முடியுமா? – என்சிபிக்கு மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கேள்வி

போதைப் பொருள் சோதனை மற்றும் பறிமுதல் சமயங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சாட்சியமாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி)  அதிகாரி சமீர் வான்கடே பயன்படுத்தியது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிளெட்சர் பட்டேல் என்பவரை வான்கடே சாட்சியமாக பயன்படுத்தியது தொடர்பாக ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை நவாப் மாலிக் வெளியிட்டுள்ளார்.

சமீர் வான்கடே மற்றும் அவரது சகோதரி ஜஸ்மீன் வான்கடே உடன் பிளெட்சர் பட்டேல் இருக்கும் புகைப்படத்தைக் குறிப்பிட்ட நவாப் மாலிக், என்சிபி அதிகாரிகள் அவர்களுக்குத் தெரிந்தவர்கள், குடும்ப நண்பர்கள் ஆகியோரை சாட்சியமாக பயன்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள்மூலம் என்சிபி போதைப் பொருள் பறிமுதல் செய்கிறதா அல்லது பணம் பறிக்க முயல்கிறதா என வினா எழுப்பியுள்ளார்.

நவாப் மாலிக்கின் புகார்களுக்கு என்சிபி தரப்பில் இருந்து இதுவரை பதில் அளிக்கவில்லை.

Source : The Hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்