Aran Sei

‘ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள்கள் சர்க்கரைகளாக மாறிவிடும்’- மகாராஷ்டிரா அமைச்சர்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாஜகவை விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சாகன் புஜ்பால், நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் அந்தப் போதைப்பொருட்கள் சர்க்கரை தூளாக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.

நேற்று(அக்டோபர் 23), தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ள சாகன் புஜ்பால், “குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு பதிலாக, ஒன்றிய அரசின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஷாருக்கானை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் அந்தப் போதைப் பொருட்கள் யாவும் சர்க்கரை துகளாகிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஓபிசி ஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. ஆனால், பாஜக நிர்வாகி ஒருவர் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாஜக எதிரானதா என்பதை பாஜகவினர் தெளிவுப்படுத்த வேண்டும்” என்று சாகன் புஜ்பால் கூறியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்