Aran Sei

சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டு கைதி இறந்ததாக குற்றச்சாட்டு – போதிய ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாத அவலம்

காராஷ்டிரா மாநிலம் ஜல்கோன் சிறையில் விசாரணைக் கைதி சிறைத்துறை காவலர்களால் தாக்கப்பட்டு இறந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எட்டு மாதங்கள் ஆகியும் அம்மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணை கைதி சிறையில் மரணம் – சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் அந்த சிறையிலேயே பணிபுரிந்து வருவதாகவும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை முழுமையாக அணுகிவருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சிறையில் இறந்த ரவீந்திர ஜெகதாப் கடந்த செப்டம்பர் 7 அன்று  கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் மற்றும் காசநோய் இருந்துள்ளது.இந்நிலையில் தனி சிறையில் அடைக்கப்பட அவர், மருந்து எடுத்துக்கொள்ளும் பொது தவறுதலாக சிறை அதிகாரி ஒருவர் மீது நீரை துப்பியதாக அந்த சிறையில் பணிபுரிந்து தற்போது மரத்வாடா சிறையில் பணிபுரியும் காவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு : அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவு

இதனைத்தொடர்ந்து, அந்த அதிகாரியுடன் சேர்ந்து மற்ற காவலர்களும் தாக்கியதாகவும், சிறைத்துறை கண்காணிப்பாளரும் இணைந்து தாக்கியதாகவும் அந்த காவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த காவலரைத் தவிர்த்து எண்ணற்ற கைதிகளும் இந்தக் குற்றத்திற்கு சாட்சியாக உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது பிரேத பரிசோதனை ஆய்விலும் 21 காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.

‘பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து’ – விடுப்பு வழங்க முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை

இந்நிலையில், போதிய ஆதாரங்கள் உள்ளநிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையையும் சிறைத்துறை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்று அந்த செய்தி குறிப்பிடுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்