Aran Sei

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது – மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தகவல்

த நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் யாரும் பேசக் கூடாது என்றும் நிலைமையை காவல்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் கூறியுள்ளார்.

இன்று (ஏப்ரல் 5), மும்பையில் திலீப் வால்ஸ் பாட்டீல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, மசூதிகளுக்கு வெளியேயுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்துள்ள அவர், “இரு சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் கருதுகிறது. நிலைமையை மகாராஷ்ட்ர காவல்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘மசூதி ஒலிபெருக்கிகளால் 75 ஆண்டுகளாக இல்லாத பிரச்சனை இப்போது மட்டும் ஏன்?’ – எச்.டி.குமாரசாமி கேள்வி

ராஜ் தாக்கரேவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எழும் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது, “அது குறித்து ஆய்வு செய்து, அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சில கட்சிகள் பிரிவினையைத் தூண்டும் கருத்துகளை பேசி சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இது மகாராஷ்டிரா மற்றும் நம் நாட்டின் ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததல்ல என நான் சட்டப்பேரவையிலேயே பேசியிருந்தேன்” என்று மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் கூறியுள்ளார்.

“மசூதிகளுக்கு வெளியே ஒலிப்பெருக்கிகள் எதற்கு? மதம் உருவான போது, ஒலிப்பெருக்கி இருந்ததா? ஒலிப்பெருக்கிகளை அரசாங்கம் அகற்ற வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் ஒவ்வொரு மசூதியின் முன்பாகவும் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் ஹனுமான் சாலிசா பாடுவார்கள்”என்று அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அண்மையில் தெரிவித்திருந்தார்.

Source: PTI

“இலங்கையின் வீழ்ச்சிக்கு இனவாதம்தான் காரணம்”

கூடுதல் தகவலுக்கு க்ளிக் செய்யவும்…

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்