மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜனின் அண்மைய தேவை 270 மெட்ரிக் டன்னிலிருந்து 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
ஆனாலும், இது முந்தைய காலங்களில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது தேவைப்பட்ட 1700-ல் இருந்து 2000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவோடு ஒப்பிடுகையில் இது ஒரு பகுதிதான் என்று மகாராஷ்ட்ர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நேற்று(ஜனவரி 9), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள ராஜேஷ் தோபே, “மகாராஷ்ட்ராவில் ஒவ்வொரு இரண்டு, மூன்று நாட்களுக்கும் ஒருமுறை புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதைத் தொடர்ந்து, ஜனவரி 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டியிருந்தது” என்று கூறியுள்ளார்.
மேலும், “தற்போது, மருத்துவ ஆக்சிஜனின் தேவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுள்ளவர்கள் மற்றும் கொரோனா அல்லாத நோயாளிகளுக்கான மருத்துவ ஆக்சிஜன் தேவை 270 மெட்ரிக் டன்னிலிருந்து 350 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய கொரோனா அலை காலங்களில், இத்தேவை 1700 மெட்ரிக் டன்னில் இருந்து 2000 மெட்ரிக் டன்னாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.