Aran Sei

‘எங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெற மத்திய அரசின் காலில் விழக் கூடத் தயார்’ – மகாராஷ்ட்ரா அமைச்சர்

ங்களுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜனை பெற மத்திய அரசின் காலில் விழக் கூடத் தயாராக இருக்கிறோம் என்று மகாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியுள்ளார்.

நேற்று (ஏப்ரல் 22), செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  “மக்களின் உயிரைக் காப்பாற்ற மகாராஷ்ட்ரா அரசு எல்லாவற்றையும் செய்யத் தயாராக உள்ளது. நாங்கள் மிகவும் கண்ணியமான வேண்டுகோளை மத்திய அரசிடம் விடுக்கின்றோம். எங்களுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜனை பெற மத்திய அரசின் காலில் விழக் கூடத் தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

’கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு’ – மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

“மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்கான அதிகாரம் மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது. மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மகாராஷ்டிராவுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்று ராஜேஷ் டோப் வலியுறுத்தியுள்ளார்.

“ஆக்ஸிஜனை கொண்டு வரும் டேங்கர்கள் பச்சை வழித்தடத்தில் பயணம் செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் வழியாக, ஆக்சிஜன் விரைவாக வந்து சேர முடியும். இக்கோரிக்கையை மத்திய அரசிடம் மீண்டும் மீண்டும் வைக்கிறேன்.” என்று  அவர் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்