பாஜகவின் அழுத்தத்தால் சர்வதேச பிரபலங்களை கண்டித்து இந்திய பிரபலங்கள் கருத்து தெரிவித்தார்களா என மகராஷ்ட்ரா அரசு விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, டெல்லியைச் சுற்றியுள்ள போராட்டப் பகுதிகளில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பான சிஎன்என் செய்தியைக் குறிப்பிட்டு “இது (விவசாயிகள் போராட்டம்) குறித்து நாம் ஏன் பேசுவதில்லை?” என்று ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.
ரிஹான்னாவைத் தொடர்ந்து கிரேட்டா துன்பெர்க், மியா கலீஃபா, ஜேமி மார்கன், மீனா ஹாரிஸ், லிசி கங்குஜம், வனேசா நகாடே, அமெண்டா கெர்னி உள்ளிட்ட பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்துக்களை தெரிவித்தனர்.
கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி
இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், ”இது போன்ற விஷயங்களில் விரைந்து கருத்து தெரிவிப்பதற்கு முன், உண்மைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரச்சினைகள்குறித்து சரியான புரிதல் வேண்டும்” எனவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில், பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் ”துல்லியமானதாகவோ” அல்லது ”பொறுப்பானதாகவோ” இல்லை எனவும் தெரிவித்தது.
“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி
மேலும் ”இந்தியா (வெளிநாட்டு) பிரச்சாரத்திற்கு எதிராக இருக்கிறது” எனும் ஹேஷ்டேக்கையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பயன்படுத்திருந்தது.
அதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருக்கும் சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்க கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமையைப் பறைசாற்றுவோம்.” என்று தெரிவித்திருந்தார்.
“ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்” – பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து
அவரை தொடர்ந்து ”இந்தியா (வெளிநாட்டு) பிரச்சாரத்திற்கு எதிராக இருக்கிறது” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, விராத் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, சுனில் ஷெட்டி, அஜய் தேவ்கான், கரண் ஜோஹர், சாய்னா நேவால், அக்ஷய் குமார், லதா மங்கேஷ்கர் போன்றோரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம்குறித்து சர்வதேச பிரபலங்களின் கருத்துக்குப் பதிலடி கொடுக்க இந்திய பிரபலங்கள் மத்திய பாஜக அரசால் நிர்பந்திக்கப்பட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மகராஷ்ட்ரா காங்கிரஸ், உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக்கிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியினரின் உணவு உபசரிப்பு: இது ஒன்றே போதுமானது – மியா காலிஃபா நெகிழ்ச்சி
இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் “பல பிரபலங்கள் ஒரே மாதிரியான கருத்தைத் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும்” தெரிவித்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
“உங்கள் டிராக்டர் கவர்ச்சிகரமானது” – விவசாயிகளுக்கு ஆதரவாக மீண்டும் குரல் எழுப்பிய அமெண்டா
மகாரஷ்ட்ரா காங்கிரஸ் தலைவர் சச்சின் சவாந்த், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அக்ஷய் குமார் மற்றும் சாய்னா நேவால் ஒரு கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். நடிகர் சுனில் ஷெட்டி தன்னுடைய ட்விட்டர் பதிவில் ஒரு பாஜக தலைவரைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு பிரச்சனையில் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க அனைவருக்கும் உரிமை இருந்தாலும், இந்த விவகாரத்தில் அவர்கள் கருத்துக் கூற நிர்பந்திக்கப்பட்டார்களா என்று விசாரணை செய்ய வேண்டும் என அவர் ட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.