Aran Sei

போராட்டதிற்குப் பெருகும் ஆதரவு : டெல்லியை நோக்கி வாகன பேரணிக்குத் திட்டம் – மகாராஷ்டிரா விவசாயிகள்

Image Credits: The Hindu

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அகில இந்திய கிசான் சபா இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கும் அமைப்புகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான மகாராஷ்டிரா விவசாயிகளும் டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என இந்த அமைப்பு கூறியுள்ளது.

விவசாயிகள் போராட்டம் : விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

“மகாராஷ்டிராவின் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிசம்பர் 21-ம் தேதி நாசிக் பகுதியில் ஒன்றுகூடுவார்கள். டெல்லியில் முகாமிட்டுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் அன்று டெல்லியை நோக்கி ஒரு ‘வாகன அணிவகுப்பை’ தொடங்குவார்கள்” என்று அகில இந்திய கிசான் சபாவின் தேசியத் தலைவர் அசோக் தவாலே தெரிவித்துள்ளார்.

22 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – முடங்கியது டெல்லி போக்குவரத்து

டிசம்பர் 24-ம் தேதி, 1,266 கிமீ தூரம் பயணித்து ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் போராடிவரும் விவசாயிகளுடன் இணைந்துகொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

“டிசம்பர் 21-ம் தேதி, மதியம் நாசிக் நகரில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வாகன பேரணி தொடங்கும். நாசிக் நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் நிலையத்துக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அகில இந்திய கிசான் சபாவின் மாநில பொதுச் செயலாளர் அஜித் நவாலே தெரிவித்துள்ளார்.

மேலும் தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் – தலைவர்கள் 9 மணி நேரம் உண்ணாவிரதம்

“அகில இந்திய கிசான் சபாவுக்கு மூன்று முக்கிய கோரிக்கைகள் உள்ளன, அது, விவசாயிகளுக்கு எதிராகவும் கார்பரேட்களுக்கு ஆதரவாகவும் உள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெறுதல், கொள்முதல் உத்தரவாதம் மற்றும் உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்தல் ஆகியவை” எனவும் ஜித் நவாலே கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்