Aran Sei

மகாராஷ்டிரா: ஓபிசி இடஒதுக்கீடு பெறுவது தேவேந்திர ஃபட்னாவிஸின் கடமை – தேசியவாத காங்கிரஸ்

ச்ச நீதிமன்றத்தில் இருந்து இதர பிறபடுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு பெறுவது மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அவரது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பால் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசிலுக்கிடையில் தேசியவாத காங்கிரஸ் ஒரு கூட்டத்தை நட்த்தியுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சகன் புஜ்பால், இதர பிறபடுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக விவாதங்கள் கூட்டத்தில் நடந்தன. நாங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம். இப்போது, ​​உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு பெறுவது துணை முதல்வர் மற்றும் அவரது அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” – ஆ.ராசா

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு,“மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கத்தை அமைத்த ஒரு நாள் கழித்து, மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மும்பையில் உள்ள மந்த்ராலயாவில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான கூட்டத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதய்பூர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பா? – பாஜக தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்

உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மகாராஷ்டிராவின் அப்போதைய மகா விகாஸ் அகாடி (MVA) அரசாங்கம் உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இடஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ விருப்பங்களை ஆராய முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Source: ndtv

Periyar தான் எங்க ஆளு | Jeeva Sagapthan Interview | Swaminathan

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்