Aran Sei

‘இட ஒதுக்கீடு உரிமை மாநிலங்களுக்கே’: நாடாளுமன்றத்தில் எழுப்ப மகாராஸ்ட்ரா அரசு திட்டம்

ல்வேறு சமூக பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவை நீட்டிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்குவதற்காக அரசியலமைப்பின் 102 வது திருத்தச் சட்டத்தில் ஒன்றிய அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு கோரியுள்ளது.

அண்மையில் முடிவடைந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மழைகால கூட்டத்தொடரில், இதுதொடர்பாக ஆளும் கூட்டணியான மகா விகாஸ் அகாதி அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்றியது. அத்தீர்மானங்களில், அந்தந்த மாநில அரசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் அவற்றுள் தேவையான மாற்றங்கள் செய்வதற்கும் உரிமை வழங்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியது.

தேர்தல் அரசியலில் மராத்தா சமூகம் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் சமூகம்.  மாநிலத்தில் அவர்களின் மக்கள் தொகையில் 35 சதவீதமாக உள்ளது.

மராத்தா இடஒதுக்கீடு ரத்து; 50% கட்டுப்பாட்டை மறுபரிசீலினை செய்ய நீதிமன்றம் மறுப்பு; 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற மழைகால கூட்டத்தில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்பவுள்ளதாக மாநில அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சரும் மராத்தா இட ஒதுக்கீடு அமைச்சரவை துணைக்குழுவின் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

மேலும், “இட ஒதுக்கீடு தொடர்பான அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே, ஒன்றிய அரசு மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது 102 -வது திருத்த சட்டங்களில் மாற்றங்களைச் செய்து மாநிலங்களுக்கு அவ்வுரிமையை வழங்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே 5 அன்று, மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

‘பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சாதிகளைச் சேர்க்கும் உரிமை மாநிலங்களுக்கே வேண்டும்’ – ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

இந்நிலையில், மே 11 அன்று, மகாராஷ்ட்ரா மாநில அரசு இந்தத் தீர்ப்புகுறித்து ஆராய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திலீப் போசல் தலைமையில் குழுவை நியமித்தது.

இதுகுறித்த அறிக்கையை அந்தக் குழு அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயிடம் அறிக்கையாக சமர்பித்துள்ளதாகவும் மேலும், அரசியல்சாசன அமர்வில் இந்த தீர்ப்பு குறித்து சீராய்வு தாக்கல் செய்யலாமெனவும் பரிந்துரைத்தது.

இந்தக் குழுவின் அறிக்கையில் 40 க்கும் மேற்பட்ட சட்டநுணுக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்காக கொண்டுவரப்பட்ட 103 வது அரசியல்சாசன திருத்தத்தைக் கணக்கில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

source; indianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்