Aran Sei

லகிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து முழுஅடைப்பு – முடங்கியது மகாராஷ்டிரா

கிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பொதுமுடக்க அழைப்பை ஏற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அக்.3 மூன்றாம் தேதி வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியாக உள்ளது – மோடியின் தொகுதியில் பிரியங்கா காந்தி பேச்சு

விவசாயிகள் மீதுமோதிய காரில் மத்திய உள்துறைஇணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா இல்லை என்று மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தர பிரதேச காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.  அதைத் தொடர்ந்து 15 நாள் நீதிமன்ற காவலில் ஆசிஷ் மிஸ்ராவை வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் லகிம்பூர் கேரி வன்முறையைக் கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

கிராமத்தில் இருந்து வெளியேற மறுத்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பம் – பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறை

மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அங்காடி, பொது போக்குவரத்து போன்றவை இயங்கவில்லை ஆம்புலன்ஸ் சேவை, மருந்துக் கடைகள், பால் போன்ற அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

 

Source: timesofindia

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்