Aran Sei

ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்

கொரோனா இரன்டாவது அலை பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்தேசிவிர் மருத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ரெம்தேசிவிர் மருந்தையும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் அவசரமாக வழங்குமாறு மத்திய அரசிடம் மகாராஷ்டிரா அரசு கோரியுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டதாகவும், அப்போது பிரதமர் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தலில் இருக்கிறார். அவர் வந்தபிறகு உங்களை (மகாராஷ்டிரா முதலமைச்சர் அலுவலகம்) தொடர்பு கொள்வார் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவுக்கு ரெம்தேசிவிர் மருந்தைத் தரமறுக்கும் மத்திய அரசு குஜராத்துக்கு வழங்கியது ஏன்? – மகாராஷ்டிர அமைச்சர் கேள்வி

மகாராஷ்டிரா முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று ரெம்தேசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மகாராஷ்டிரா முதலமைச்சரிடம் பேசினேன். அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவியாக 1,121 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரெம்தேசிவிர்  மருந்தை மகாராஷ்டிரா அரசு அளிக்க வேண்டாம் என மருந்து நிறுவனங்களை மத்திய அரசு மிரட்டியிருப்பதாக, அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: India today

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்