மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில், விவாகரத்துக்குப் பின் மறுமணம் செய்த பெண்ணை, அவர் சார்ந்த சாதி பஞ்சாயத்தார் தங்களது எச்சிலை நக்க வேண்டுமென வற்புறுத்தியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மறுமணம் செய்ததற்காக 1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் இரண்டு தண்டனைகளையும் மறுத்து சாதி பஞ்சாயத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய அப்பெண்ணின் குடும்பத்தினர், “மறுமணம் செய்ததால் அந்த பெண், தங்கள் எல்லோரும் வாழை இலையில் துப்பும் எச்சிலை நக்க வேண்டும் என்று பஞ்சாயத்தார் கூறினார்கள்.” என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மறுமணம் செய்த அந்த பெண், அவரது சாதியை சார்ந்த ‘நாத் ஜோகி’ பஞ்சாயத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.