Aran Sei

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து – 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்

காராஷ்டிரா மாநிலம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

விஜய் வல்லாப் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலை 3 மணிக்குத் தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனையில் 90 நோயாளிகள் இருந்த்தாகவும், 18 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பபட்டிருந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை வெளியேற சொன்ன மருத்துவமனை – வேறொரு மருத்துவமனைக்கு இடம்பெயர உத்தரவு

விபத்திலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கைக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

தீ விபத்தில் உயிரிழந்துள்ளவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 50 ஆயிரமும் இழப்பீடாகப் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குளிர்சாதன இயந்திரங்கள் வெடித்தது காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாக மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவுத் தலைவர் விவேகானந்த் கதம் தெரிவித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்