Aran Sei

‘விவசாய சட்டங்களுடன் புதிய தொழிலாளர்கள் சட்டங்களையும் எதிப்போம்’: தொழிலாளர் – விவசாயிகள் இணையும் மகாபஞ்சாயத்து

விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில், தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வரும் மார்ச் 28 ஆம் தேதி நடக்கவுள்ள கீர்த்தி கிசான் மகாபஞ்சாயத்தில் 300 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளும், விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் சட்டங்கள் – தொழிலாளர் அமைச்சகம் தகவல்

இது குறித்து பேசிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.லாதர்,  “கீர்த்தி என்றால் தொழிலாளர். கிசான் என்றால் விவசாயி.  நாம் விவசாய சட்டங்கள் குறித்து நிறைய விவாதித்து வருகிறோம். ஆனால், புதிய தொழிலாளர் சட்டங்களைக் குறித்து யாரும் விவாதிப்பதில்லை. அவை விவசாய சட்டங்களைப் போலவே பெரும் ஆபத்தைத் தொழிலாளர்களுக்கு வழங்குபவை. விவசாய சட்டங்களுடன் தொழிலாளர் சட்டங்களையும் இணைத்து விவாதிக்க இது நல்ல முயற்சியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

“இந்த நான்கு தொழிலாளர் சட்டங்களின் காரணமாக ஒரு தொழிலாளிக்குக் குறைந்தபட்ச ஊதிய முறைக்குப் பதில், பணியில் இருந்த நேர எண்ணிக்கை அடிப்படையிலேயே ஊதியம் வழங்கப்படும். இனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருக்காது. பெண்களுக்கு இரவு பணி அனுமதிக்கப்பட்டுள்ளது. வைப்புநிதி மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் இனி இருக்காது.” என்று  அவர் பட்டியலிட்டுள்ளார்.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்

மேலும், “முந்தைய சட்டத்தின்படி, 10 சதவிகித தொழிலாளர்கள் அல்லது 100 தொழிலாளர்கள் (எது அதிகமாக இருக்கிறதோ) ஒப்புக் கொண்டால், ஒருவர் தொழிற்சங்கத்தை உருவாக்க முடியும். ஆனால், இத்திருத்த சட்டத்தின் காரணமாக 50 சதவீத தொழிலாளர்களின் ஒப்புதல் வேண்டும். இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்தையும் கீர்த்தி கிசான் மகாபஞ்சாயத்தில் விவாதிப்போம்.” என்று எஸ்.ஆர்.லாதர் கூறியுள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்