விவசாய சட்டங்களுக்கு எதிராக வரும் பிப்ரவரி 20-ம் தேதி மகாராஷ்டிராவின் யவத்மாலில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடக்கவுள்ளது என்றும் அதில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் உரையாற்றுவார் என்றும் பாரதிய கிசான் யூனியன் அறிவித்துள்ளது.
விவசாயச் சட்டங்களுக்கு எதிராக, முதல் முறையாக வட இந்தியாவுக்கு வெளியே நடக்கும் பெரிய போராட்டம் இதுவாகும்.
இதுகுறித்து, பாரதிய கிசான் யூனியனின் ஊடக பொறுப்பாளர் தர்மேந்திர மாலிக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும் போது, “நாங்கள் பிப்ரவரி 20-ம் தேதி யவத்மாலில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மகாபஞ்சாயத்தில், ராகேஷ் திகாயத் உரையாற்றுவார்.” என்று தெரிவித்துள்ளார்.
போராடுவதற்கு தடை விதித்த பாஜக அரசு: ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள விவசாயிகள்
மேலும், “பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. இந்த மாநிலங்களிலும் பல மகாபஞ்சாயத்துகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த விவசாயிகள் போராட்டத்தை மகாராஷ்டிராவுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள விவசாயிகளையும் அணிதிரட்டுவதே யவத்மாலில் நடக்கவுள்ள மகாபஞ்சாயத்தின் நோக்கமாகும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.