Aran Sei

இன்று மும்பையில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் – அடுத்தக்கட்ட செயல்திட்டம் அறிவிப்பு

Image Credit : thehindu.com

வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துதல், வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற பிரச்சினைகள் உட்பட அனைத்து விவசாயம் தொடர்பான பிரச்சினைகளும் மும்பையில் இன்று நடைபெற உள்ள ‘கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்’ இல் விவாதிக்கப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத்  கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை கடைப்பிடிக்கும் வகையில், குளிர்காலக் கூட்டத் தொடரில் தினமும் 500 விவசாயிகள் அமைதியான முறையில் டிராக்டர் பேரணியில் பங்கேற்பார்கள் என்று விவசாய சங்கங்களின் கூட்டு அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (SKM) இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

நவம்பர் 29-ம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று நாங்கள் அறிவித்தபோது, ​​​​3 விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்படவில்லை. இப்போது சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, நாங்கள் பேரணியில் ஈடுபடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எங்களின் எஞ்சிய கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு  உடன்படவில்லை என்றால் அடுத்த நடவடிக்கையை டிசம்பர் 4-ம் தேதி கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் முடிவை சம்யுக்த் கிசான் மோர்ச்சா வரவேற்றாலும், உரிய நாடாளுமன்ற நடைமுறைகள் மூலம் அறிவிப்பு அமலுக்கு வரும் வரை காத்திருப்பதாகக் கூறியுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டரீதியான உத்தரவாதம் மற்றும் மின்சாரத் திருத்த மசோதாவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்