Aran Sei

ஒரு நாளைக்கு 22 மணி நேரம் நாட்டுக்காக உழைக்கும் பிரதமர் மோடி – மகாராஷ்டிர பாஜக தலைவர் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என்றும் தூங்காமல் 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பரிசோதனையை அவர் செய்து வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக தலைவரும் மகாராஷ்ட்ர சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

நேற்று (மார்ச் 20), மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு முன்னதாக கோலாப்பூரில் பாஜக தொண்டர்களிடம் பேசியுள்ள சந்திரகாந்த் பாட்டீல், “பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். தினமும் 22 மணி நேரம் வேலை செய்கிறார். அவர் தூங்காமல் வேலை செய்யவே இப்போது இந்த பரிசோதனை செய்து வருகிறார். பிரதமர் நாட்டுக்காக ஒவ்வொரு நிமிடமும் வேலை செய்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

உலக பட்டினிக் குறியீட்டு எண் பட்டியலில் 94 வது இடத்தில் இந்தியா – பதுக்கல்காரர்கள் போல செயல்படும் ஒன்றிய அரசே காரணம் என குற்றச்சாட்டு

“பிரதமர் மோடி 24 மணி நேரமும் விழித்திருந்து நம் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தூக்கத்தைத் முற்றிலுமாக தடுக்க முயற்சிக்கிறார். அவர் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்குவதில்லை. பிரதமர் மோடி மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறார். நாட்டில் எந்த கட்சியில் என்ன நடந்தாலும், அதை அவர் அறிந்துவிடுவார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்