Aran Sei

அரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் வரலாற்று கறை – நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம்.

நாடாமன்றத்தில் விவாதங்களின்றி  அரசு பொது காப்பீடு தனியார்மயச் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று மக்களைவையில் மற்றொரு கொடிய நாள்.

விவாதங்கள் ஏதுமின்றி அரசு பொது இன்சுரன்ஸ் தனியார்மயச் சட்ட திருத்தம் நிறைவேற்றி இருக்கிறது மோடி அரசு” என தெரிவித்துள்ளார்.

மேலும், ”தேசியமயம் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எனில், அதை சிதைக்கிற இந்த சட்ட திருத்தம் வரலாற்றின் கறையாக இருக்கும்” என கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்