தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் கேட்டதற்கு ஏற்கனவே 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில். இது கணக்குகளை நேர் செய்யும் விசயமல்ல என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எனது கடிதத்திற்கு பதிலளித்துள்ள ஒன்றிய சுகாதரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.” என பதிவிட்டுள்ளார்.
எனது கடிதத்திற்கு பதிலளித்துள்ள @drharshvardhan தமிழகத்துக்கு 650 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்
இது கணக்குகளை நேர்செய்யும் விசயமல்ல.மனிதர்களை கடைசி நேரத்தில் கைவிட்ட கொடுஞ்செயல்
எங்கள் போராட்டம்
ஆக்ஸிஜனுக்கானது மட்டுமல்ல,அநீதியான பங்கீட்டிற்கு எதிரானதும் கூட pic.twitter.com/ZOLZ8BKf0w— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 1, 2021
மேலும், ”இது கணக்குகளை நேர்செய்யும் விசயமல்ல, மனிதர்களை கடைசி நேரத்தில் கைவிட்ட கொடுஞ்செயல். எங்கள் போராட்டம் ஆக்சிஜனுக்கானது மட்டுமல்ல அநீதியான பங்கீட்டிற்கு எதிரானது கூட” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்திற்கு தேவைக்கேற்ப கூடுதல் ஆக்சிஜன் விநியோகம் செய்வது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் மே 5 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.