Aran Sei

‘பட்டின பிரவேசத்தை உலகறிய செய்த கி.வீரமணிக்கு நன்றி’ – மதுரை ஆதீனம்

யாருக்கும் தெரியாமலிருந்த பட்டினப்பிரவேசத்தை உலகறியச் செய்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றி என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது தமிழ்நாடு அரசால் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மடத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி மதுரை ஆதீனம் கொண்டாடியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அவர், “ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொள்கிறேன். பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி, இப்போது உலகறியச் செய்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்” என்று கூறியுள்ளார்.

மதுரை ஆதீனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜகவினர் வாக்குவாதம் – தர்ணாவில் இறங்கிய பத்திரிகையாளர்கள்

மேலும், “அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார். இனிமேல் சொல்ல மாட்டார். ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதை கண்டுகொள்ள போவதில்லை. முந்தைய ஆதீனம் அதிமுக, திமுக ஆட்சிகளின் போது அவைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது” என்று மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார்.

 

அமைச்சர்களை மிரட்டும் ரவுடி ஜீயர் Vanni Arasu Interview | Mannargudi Jeeyar |

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்