தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு நேற்று (மே 4) இரவு மதுரை ஆதீனம் முதன் முறையாக சுவாமி தரிசனத்திற்காக வருகை தந்துள்ளார். அவருக்கு அக்கோயிலின் சார்பில் மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள மதுரை ஆதீனம், தனக்கு மிரட்டலும் அச்சுறுத்தலும் இருப்பதாகவும், இதுதொடர்பாக பிரதமரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது, பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இந்த கேள்வி வேண்டாம் என்று பதிலளிக்க மறுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து. கஞ்சனூர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகை பாக்கி உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மதுரை ஆதீனம் பதில் கூறுவதற்கு முன்னரே, அங்கிருந்த பாஜகவை சேர்ந்த திருப்பனந்தால் ஒன்றிய தலைவர் சிவகுமார் மற்றும் சிலர் செய்தியாளர்களை அங்கிருந்து வேகவேகமாக அப்புறப்படுத்த முயன்றுள்ளனர்.
இதனால் செய்தியாளர்களுக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, செய்தியாளர்கள் மதுரை ஆதீனம் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த சிலர் செய்தியாளர்களை சமாதானப்படுத்தி தர்ணாவில் இருந்து கலைந்து போகச் செய்துள்ளனர்.
மதுரை ஆதீனம் நேற்று (மே 4) கஞ்சனூர் கோவிலுக்கு வந்த நிலையில் ஊர் மக்கள் யாரும் அவரை வரவேற்க வரவில்லை. பாஜகவினர் மட்டும் கோவிலுக்கு வந்துள்ளனர்.
தோத்துப்போன பாஜக அலறும் Gangai Amaran
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.