Aran Sei

காவல்துறை அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார் – சாதாரண பெண்களின் நிலை குறித்து நீதிமன்றம் கவலை

மிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் (டிஜிபி) அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீது, பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் கொடுத்துள்ள பாலியல் புகார் வழக்கை, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை நேரடியாக கண்காணிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணை, பாதிக்கப்பட்டவரின் அடிப்படை  உரிமை என்பது “வெற்று சடங்கு அல்ல” என்று அப்போது நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள உயர்நீதிமன்றம், “ஆண்களிடம் ஒரு தவறான மரபணு இருக்கிறது. அது சில சமயங்களில் பெண்களைத் தங்களுக்கு கட்டுப்பட்டவர் என்றும், சில சமயங்களில் பெண்ணை ஒரு உடைமையாக கருதலாம் என்றும் நினைக்க வைக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

ஆவணங்கள் சாலையில் கிடந்ததா? – டெல்லி கலவரம் வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

“ஒரு அதிகாரி, தனக்கு இருக்கும் அதிகாரம் மற்றும் தொடர்புகளைக் கொண்டு எந்த ஒரு செயலில் இருந்தும் வெளியே வர முடியும் என நினைத்தால், அதை நீதிமன்றம் ஒரு ஊமையான பார்வையாளராக பார்த்துக்கொண்டு இருக்காது. நீதிமன்றம் தலையிட்டு சட்டத்தை பாதுக்காக்கும்” என்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை  வெளியிடக் கூடாது என்றும், ஒரு பெண் அதிகாரி அத்தகைய அனுபவத்திற்கு உட்படுத்தப்படுவது குறித்தும் நீதிபதி தனது கவலை தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு “இந்த வழக்கை அரசியல்மயமாக்குதல் அல்லது விளம்பரப்படுத்துதல்” என்பதிலிருந்து கட்சிகளைத் தடுப்பதோடு,  அரசியல் கட்சிகளால் எந்த அறிக்கையும் ஊடகங்களுக்கு வழங்கப்படக் கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்வு மையம் – பரிசீலிப்பதாக பாபா அணுமின் நிலையம் சு.வெங்கடேசனுக்கு பதில்

புகார் எழுந்ததை அடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கும், அந்த காவல்துறை அதிகாரி மீது, சிபிசிஐடி காவல்துறையினர், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கும் நிலையில், நீதிமன்றம் இந்த வழக்கில் கவனம் செலுத்தியுள்ளது.

“பாதிக்கப்பட்டவர், ஒரு துணை ஆணையர் அல்லது ஒரு காவலர் போன்ற அதிகாரி படிநிலையில் கீழ் நிலையில் இருக்கும் நபராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கவே இந்த நீதிமன்றம் நடுங்குகிறது” என்று நீதிபதி வெங்கடேஷ் கூறியுள்ளார்.

“அநேகமாக, அத்தகைய அதிகாரி இந்த வழக்கில் ஒரு புகாரைக் கூட வழங்கியிருக்க முடியாது. இந்த  நிலையில்தான் பெண் அதிகாரிகள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், பின்னணி இல்லாத ஒரு சாதாரண பெண்மணிக்கு இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடந்திருந்தால் என்ன நடக்கும் என்று யோசிப்பது கடினம்” என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உ.பியில் கொல்லப்பட்ட தலித் சிறுமி – பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என காவல்துறை தகவல்

பாதிக்கப்பட்டவர் அளித்துள்ள புகாரில், பிப்ரவரி 21 ஆம் தேதி, உளுந்தூர்பேட்டைநோக்கி பயணித்தபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும், அதில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக, கிடைத்த வாகனத்தில் பயணித்து உளுந்தூர்பேட்டைக்கு சென்றதாக குறிப்பிட்டதோடு, அவர் புகார் அளிக்கச் சென்னை திரும்பு வழியில், காவல்துறை கண்காணிப்பாளர் மட்ட அதிகாரி மற்றும் இரண்டு காவலர்களால் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளதை, நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

டிஜிபி அந்தஸ்துடைய அதிகாரிக்கு எதிரான புகார் தொடர்பாக விசாரிக்க, ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்