Aran Sei

கொரோனா காரணத்தால் அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி அளித்த தமிழக அரசு – ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு

Image Credits: Wikipedia

ரியர் மாணவர்கள் அனைவருக்கு தேர்ச்சி என தமிழக அரசு எடுத்த முடிவை ஏற்க முடியாது என சென்னை  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊடரங்கின் காரணமாகத் தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்துப் பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

செக் மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட சரத்குமார், ராதிகா சரத்குமார் – ஒராண்டு சிறை தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்

மனுவை விசாரித்த நீதிபதிகள், அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என்றும், தேர்வுகள் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கல்வியில் சமரசம் செய்யாமல், எந்த மாதிரியான தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாமென தமிழக அரசு ஆலோசனை செய்ய வேண்டும். இது தொடர்பாக ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் யூஜிசிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்