சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற பரிந்துரை செய்துள்ளது.
நேற்று(நவம்பர் 9), உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கையின்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான குழு, செப்டம்பர் 16 அன்று நடைபெற்ற கூட்டத்தில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றவும் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, ஜனவரி 2021 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டு இன்னும் ஓர் ஆண்டு கூட நிறைவடையவில்லை.
வலுவான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற சஞ்சிப் பானர்ஜி, தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததற்கு, தேர்தல் ஆணையத்தின்மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மற்றொரு வழக்கில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.