Aran Sei

பாலியல் வன்கொடுமையைத் தடுக்க, வேலைக்குச் செல்லும் பெண்களைக் கண்காணிக்க வேண்டும் – மத்திய பிரதேச முதல்வர்

credits : the wire

கடந்த 74 வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது குறித்து ஆராய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் மத்திய அரசு குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் பேசியதை பிரதிபலிக்கும் வகையில், பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட ”சம்மன்” விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “ நமது மகள்களின் திருமண வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை ஒரு விவாதப் பொருளாக மாற்ற விரும்புகிறேன், தேசம் இந்தத் திட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘லவ் ஜிகாத்-ல்’ ஈடுபட்டால் 5 ஆண்டுகள் சிறை – மத்தியப் பிரதேசம்

ஒரு புதிய வழிமுறையை (System) அறிமுகப்படுத்துவதாக கூறிய அவர், ”வேலைக்காக வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்” என்று தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தின் வழியில் மத்திய பிரதேசம் : மத சுதந்திர சட்டம் நிறைவேற்றம்

மேலும் பேசிய அவர், பெண்களுக்கு அவசர உதவி எண் வழங்கப்படும் என்றும் அசாதரண சூழ்நிலையில் பெண்கள் அந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆபத்து பொத்தான்கள் (Panic Button) பொருத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் பிற்போக்கான திட்டம் என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

`பசுக்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ – மத்தியப் பிரதேசம்

இந்தத் திட்டம் தொடர்பாக டெப்புட்டி ஆசியாவின் ஆசிரியர் ரிதுபர்னா சாட்டர்ஜி, இந்தத் திட்டம் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் காவல்துறையில் பதிவு செய்யப்படாமல் விட்டதே காரணம் என மீண்டும் அவர்கள் மீது குற்றம் சுமத்தவே வழிவகுக்கும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் சமீபமாக 45 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டிருந்தார் அதற்கு 36 மணி நேரத்திற்குப் பிறகு மளிகை கடைக்கு திண்பண்டம் வாங்கச் சென்ற 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்