Aran Sei

மதமாற்ற தடைச் சட்டம்: மத்திய பிரதேசத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு

credits : the print

பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் மதமாற்றங்களைத் தடுக்கும் நோக்கோடு, ” யாராவது மதமாற்றமோ அல்லது லவ் ஜிகாத் போன்றவற்றைத்  திட்டமிட்டால், அழிக்கப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்திருந்ததார்.

இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். ‘லவ் ஜிகாத்’ எனும் வார்த்தை, இந்தியாவில் உள்ள சட்ட அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதல்ல.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி மத்திய பிரதேச அமைச்சரவை மத சுதந்திர மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதா அம்மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருடைய ஒப்புதலுக்குப் பின்னர் மத்திய பிரதேச அரசாங்கம் மத சுதந்திர மசோதாவை, அரசாணையாக வெளியிட்டது.

லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தில் முதல் வழக்குப் பதிவு : யோகி அரசு

இந்நிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதியப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

`திரிபுராவிலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் வேண்டும்’ – இந்துத்துவ அமைப்பினர் போராட்டம்

அந்தப் புகாரில் 25 வயது ஆண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார் என்றும் அவரை திருமணம் செய்து கொண்டு அவருடைய சமுதாயத்திற்கு மாறச் சொல்லி காட்டாயப்படுத்தி வருகிறார் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

மத்திய பிரதேசத்தின் மத சுதந்திர சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை, மிரட்டுதல், உடல்ரீதியாக தாக்குதல் ஆகிய பிரிவுகளில் அந்த நபர் மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

மோசடி செய்து மதம் மாற்றுவதற்கு, திருமணத்திற்காக மதம் மாற்றுவதற்கு எதிராக பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ 50,000 ஆம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய பிரதேசத்தின் மத சுதந்திர சட்டம் 2020-ன் கீழ் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதமாற்றம் செய்ததற்கான ஆதாரம் இல்லை – பஜ்ரங் தளத்தால் மிரட்டப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் சிறையிலிருந்து விடுவிப்பு

உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் பல இஸ்லாமிய ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் ”வயது வந்த இரு நபர்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்த்தெடுத்துக் கொள்வது அவர்கள் உரிமை, அதில் யாரும் தலையிடக் கூடாது” என வலியுறுத்தியிருந்தது.

பஜ்ரங் தளத்தை ஃபேஸ்புக்கில் தடை செய்யாதது ஏன்? – நாடாளுமன்ற நிலைக்குழு கேள்வி

உத்தர பிரதேசத்தின் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தால் பலர் போலியாக கைது செய்யப்படுவதால், இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி 100 ஓய்வுப்பெற்ற முன்னாள் இந்திய குடிமையியல் பணி அதிகாரிகள் (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஇஎஸ்) முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சட்டத்தை சமூக செய்றபாட்டாளர்கள் ‘கருப்புச் சட்டம்’ என்று கூறுயது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்