Aran Sei

பெண் திருமண வயது குறித்து சர்ச்சை பேச்சு – காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பிய குழந்தைகள் ஆணையம்

திருமணத்திற்கு பெண்ணின் குறைந்தபட்ச வயது குறித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் கருத்திற்கு விளக்கம் கேட்டு, குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநில பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உள்ளது. பெண்களுக்கு 18 வயதாக உள்ளது. பெண்களுக்கான குறைந்தபட்ச வயதையும் 21 வயதாக உயர்த்த வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமையைத் தடுக்க, வேலைக்குச் செல்லும் பெண்களைக் கண்காணிக்க வேண்டும் – மத்திய பிரதேச முதல்வர்

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் சஞ்சன் சிங் வெர்மா, “15 வயதிலேயே பெண்கள் இனப்பெருக்கம் செய்ய முடியும். இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. மருத்துவர்களின் அறிக்கையின்படி, பெண்கள் 15 வயதில் குழந்தையைத் தாங்குவதற்கு ஏற்றவர்களாகிறார்கள். இதன் காரணமாக, ஒரு பெண் 18 வயதில் திருமணத்திற்கு தயாராவதற்கான போதுமான முதிர்ச்சியைப் பெற்றுவிடுகிறார். பெண்கள் 18 வயதை எட்டியவுடன், தங்கள் மாமியார் வீட்டிற்கு சென்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் என்ன விஞ்ஞானியா இல்லை மருத்துவரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது..

45 வயது பெண் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள கொடூரம்

சஞ்சன் சிங் வெர்மாவின் கருத்தை விமர்த்துப் பேசிய, பாஜக  செய்தித் தொடர்பாளர் ராகுல் கோத்தாரி, “சஜ்ஜன் சிங் வர்மாவின் கருத்து மத்திய பிரதேசத்தில் உள்ள பெண்களை மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தியும் இளம் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவும் பெண்கள்தான் என்பதை வர்மா மறந்துவிட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் தேசியத் தலைவர் சோனியா காந்தி, சஜ்ஜன் சிங் வர்மாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கும்படி அறிவுறுத்த வேண்டும். மேலும், கட்சியில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

‘பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்லக் கூடாது’ – பாலியல் வன்கொடுமை குறித்து தேசிய மகளிர் ஆணையம் கருத்து

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையம்  வர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “இரண்டு நாட்களுக்குள் இதற்கு விளக்கத்தை வழங்க வேண்டும். மைனர் பெண்களையும் இந்திய அரசியலமைப்பு  சட்டத்தையும் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதற்குச் சரியான விளக்கத்தை வழங்க வேண்டும்” என்று அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்