மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டப் பகுதியில் பழங்குடியின சமுகத்தைச் சார்ந்தவரை எட்டு பேர் தாக்கி வண்டியொன்றின் பின்புறம் கயிற்றால் கட்டியிழுத்துச் சென்றதில் அவர் மரணமடைந்த விவகாரத்தில் 5 பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
பழங்குடியின சமுகத்தைச் சார்ந்த கண்ஹையாலால் பீல், அந்தப்பகுதி வழியாக வந்த பால்காரின் இருசக்கர வாகனம் மோதியது. இதனைதொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், “கண்ஹையாலால் பீல் நீச்-சின்கோலி சாலையில் நின்றுக்கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பால்காரர் சித்தார் மால் குர்ஜார் வாகனம் மோதியுள்ளது. அவரது வாகனத்தில் இருந்த பால் கொட்டிவிடவே, அவர் பீலைத் தாக்கியுள்ளார”. என்றும் கூறியுள்ளனர்.
மேலும், அவரது நண்பர்களுக்கு அழைத்து பீலை கயிற்றால் பிணைத்து வாகனத்தின் பின்புறம் கட்டி இழுத்து சென்றதாகவும் காவல்துறையினர் குறிபிட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து , மருத்துவமனையில் மனையில் அனுமதிக்கப்பட்ட கண்ஹையாலால் கடந்த ஆகஸ்ட் 27 அன்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக எட்டு பேரின் மீது எஸ்.சி /எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உட்பட இதர பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.