பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் 9 வயது சிறுமியும், 45 வயது பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. முன்னர், உத்தர பிரதேசத்தில் கோயிலுக்குச் சென்ற 50 வயது பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போபாலில் இருந்து 800 கிமீ தொலைவில் இருக்கும் அமிலியா காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பகுதியில் வசித்து வரும் 45 வயது மதிக்கத்தக்க பெண் தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருடைய கணவர் நான்காண்டுகளுக்கு முன் மரணமடைந்ததால், இரண்டு மகன்களுடன் அந்தக் குடிசையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அந்தப் பெண்ணுடைய மகன்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் நான்கு நபர்கள் தண்ணீர் கேட்டு அவருடைய வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அந்தப் பெண் தனியாக இருப்பதை உணர்ந்த அந்நபர்கள் அந்த பெண்ணுடைய வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அப்பெண்ணைப் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், 2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்தது போல் இந்தப் பெண்ணினுடைய அந்தரங்க உறுப்புகளிலும் இரும்பு கம்பி செலுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது. இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அந்தப் பெண் மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்னின் சகோதரி அவரை ரூவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அந்தப் பெண்ணுடைய உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் அவர் குணமடைய சில வாரங்கள் ஆகும் எனவும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கோயிலுக்குச் சென்றவரைப் பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி: தலைமறைவானவரை கைது செய்தது காவல்துறை
சித்தியின் காவல்துறை கண்காணிப்பாளர் பங்கஜ் குமாவத் தலைமையில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக ரூவா மண்டலத்தின் காவல்துறை ஆய்வாளர் உமேஷ் ஜோஹா தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடைபெற்ற ஒன்றரை நாட்களுக்குள் மத்திய பிரதேச மாநிலத்தின் காந்த்வா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளிச் செல்லும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை : ‘போராட்டத்தைத் தடுக்கும் சர்வாதிகார ஆட்சி’ – ஸ்டாலின் கண்டனம்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி திண்பண்டம் வாங்குவதற்காக மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். மளிகை கடையின் உரிமையாளர் அச்சிறுமியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குற்றத்தை மூடிமறைக்க அந்தச் சிறுமியைக் கொலை செய்துள்ளார்.
பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவருக்கு காவல் நீட்டிப்பு
மளிகை கடையின் உரிமையாளர் அவருடைய மனைவியின் உதவியுடன் அந்தச் சிறுமியின் உடலை பையில் அடைத்து வீட்டின் மாடியில் வைக்க முயற்சித்துள்ளார். இதை அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் நபர்கள் பார்த்ததால் இந்தச் சம்பவம் வெளியே வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த சிறுமியின் பெற்றோர்கள் அவர்களுடைய மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ததாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
பணியிடத்தில் பாலியல் வன்கொடுமை – பாலியல் தொழிலாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
மளிகை கடையின் உரிமையாளரும் அவரின் மனைவியும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாக எண்டிடிவி குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.