பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியைக் குற்றம்சாட்டப்பட்டவரோடு ஊர்வலமாகக் கூட்டி சென்று ‘பாரத மாதாவுக்கு ஜே’ என முழக்கமிட செய்த விவகாரத்தில் 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மத்தியபிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு
மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில், கடந்த மார்ச் 28 அன்று 16 வயது சிறுமியின் மீது 21 வயது இளைஞர் பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்தச் சிறுமியையும், குற்றம்சாட்டப்பட்டவரையும் கயிற்றால் கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாரத மாதாவுக்கு ஜே என அவ்வூரைச் சேர்ந்த ஐவர் முழுக்கமிட செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட 6 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்திருந்தது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து 24 மணிநேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்தியபிரதேச மாநில காவல்துறைக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
SOURCE; PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.