Aran Sei

ம.பி. காவல்துறையில் அலுவல் மொழியாக இந்தி – பிற மொழிகளுக்குத் தடை விதித்த பாஜக அரசு

த்தியப் பிரதேச காவல்துறையின் அலுவல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் உருது, பாரசீகம் உள்ளிட்ட இந்தி அல்லாத சொற்களுக்கு பதிலாக இந்தி சொற்களை சேர்ப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் அம்மாநில பாஜக அரசு இறங்கியுள்ளது .

கடந்த மாதம், மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, மாநில காவல்துறையின் அலுவல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் இந்தி அல்லாத பிற மொழிச் சொற்களுக்கு பதிலாக இந்தி சொற்கள் மாற்றப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

`எங்களுக்கு இந்தி மொழியில் கடிதம் எதற்கு’ – சு.வெங்கடேசன் கேள்வி

இது தொடர்பாக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு, மத்தியப் பிரதேச காவல்துறை தலைமையகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், காவல்துறையின் அதிகாரபூர்வ துறைசார் வழக்கு அகராதியில் இருந்து இந்தி அல்லாத வார்த்தைகளை மாற்றுவது குறித்து ஏழு நாட்களுக்குள் தங்களின் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் காவல்துறை அலுவல் நடவடிக்கைகளில் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படும் வகையில் இந்தி வார்த்தைகளின் துறைசார் வழக்கு அகராதி தயாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தி மொழி மட்டுமல்லாது, மால்வி, புண்டெலி, பகேலி போன்ற மொழிகளுடன், பழங்குடி மொழிகளும் கணிசமாக பேசப்படுகின்றன.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்