Aran Sei

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மத மாற்ற தடை மசோதா – சட்டமாக்கி ஒப்புதல் அளித்தார் ஆளுநர்

திருமணம் அல்லது வேறு எந்த வகையிலான மதமாற்றங்களையும் தடை செய்யும் மசோதா, மத்திய பிரதேச சட்டப்பேரவையில் திங்களன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, சில வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டிருந்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, டிசம்பரில் அம்மாநில அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜனவரி மாதம் இந்த மதமாற்ற தடை மசோதா சட்டப்பேரவையில் தாக்கலானது.

இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்குள்தான் இருக்க வேண்டுமா? – 30 ஆண்டுகால தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய உச்சநீதிமன்றம் விருப்பம்

மார்ச் 1 ஆம் தேதி, மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மத்தியபிரதேச மத மாற்றத் தடை சட்டத்திற்கான மசோதா 2021 ஐ சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு, திங்கள்கிழமை சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற பெண்: பாலியல் வன்புணர்வு செய்த துணை காவல் ஆய்வாளர்

திருமணம் அல்லது வேறு எந்த வகையிலான மதமாற்றங்களுக்கும் அபராதம் விதிக்கும் மத்தியபிரதேச மத சுதந்திர அவசரச் சட்டம் 2020-க்கு ஜனவரி 9-ம் தேதி அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஒப்புதல் அளித்தார்.

இந்த அவசரச் சட்டம் தவறான விளக்கம், வஞ்சகம், பலாத்கார அச்சுறுத்தல், தேவையற்ற செல்வாக்கு, வற்புறுத்தல், திருமணம் அல்லது வேறு எந்த மோசடி யான வழிமுறைகளால் மேற்கொள்ளப்பட்டும் மத மாற்றங்களுக்குத் தண்டனை வழங்கியது.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற பிரார்த்தனை – திண்டுக்கல் கோவிலில் வீரப்பனின் மனைவி பூஜை

கடந்த மாதம் சட்டப்பேரவையில், இந்த அவசர சட்டத்தின் கீழ் 23 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக, மத்திய பிரதேச மாநில உள்துறை  அமைச்சர் கூறியிருந்தார்.

போபாலில் அதிகபட்சமாக ஏழு வழக்குகளும், இந்தூரில் 5 வழக்குகளும், ஜபல்பூர் மற்றும் ரேவாவில் தலா 4 வழக்குகளும், குவாலியரில் 3 வழக்குகளும் பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்