Aran Sei

உத்திர பிரதேசத்தின் வழியில் மத்திய பிரதேசம் : மத சுதந்திர சட்டம் நிறைவேற்றம்

த்திய பிரதேச அமைச்சரவை அம்மாநிலத்தின் மத சுதந்திர மசோதாவை, அரசாணையாக வெளியிட்டுள்ளதென்று தி வயர் தளத்தில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இதைப் போன்றதொரு அரசாணையை உத்திர பிரதேசமும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய பிரதேசத்தின் ஆளுநர் ஆனந்திபென் பட்டெலின் ஒப்புதலுக்காக, அரசாணை அனுப்பப்பட்டுள்ளதென மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

கொரோனா காரணமாக சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், மசோதாவை சட்டசபையில் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 26 ஆம் தேதி மத சுதந்திர மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

மோசடி செய்து மதம் மாற்றுவதற்கு,திருமணத்திற்காக மதம் மாற்றுவதற்கு எதிராக பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட வேண்டும் என இந்த மசோதா வலியுறுத்துகிறது.  ‘லவ் ஜிஹாத்’தை இந்த சட்டம் தடுக்கும் என மத்திய அரசின் பாஜக அரசு கூறுகிறதென தி  வயர்  தெரிவிக்கிறது. 

‘லவ் ஜிஹாத்’ எனும் வார்த்தை, இந்தியாவில் உள்ள சட்ட அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. எதுவும் தெரியாத இந்து பெண்களை இஸ்லாமிற்கு மதம்மாற்றும் கற்பனையான இஸ்லாமிய சதியை குறிக்க சங் பரிவாரின் அமைப்புகள் பயன்படுத்தும் ஒரு வார்த்தை தான் ‘லவ் ஜிஹாத்’. 

“அரசியல்வாதிகள்தான் மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” – அனுமன் கோயிலுக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்

 உத்திர பிரதேச பாஜக அரசு இதைப் போன்றதொரு அரசாணையை வெளியிட்ட பிறகு, பலர் அநியாயமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இச்சட்டத்தினால், சமீபத்தில், மொரதாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டார்; அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார். 

மேலும்,ஒரு இந்து பெண்ணுடன் நடந்து சென்றதற்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 28 நிலவரப்படி, லவ் ஜிஹாத் சட்டத்தை வைத்து, உத்திர பிரதேச காவல்துறையினர் 14 வழக்குகளை பதிவு செய்துள்ளனர், 51 பேரை கைது செய்துள்ளனர் என்கிறது இண்டியன் எக்ஸ்பிரஸ். இதில் 49 பேர் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்