Aran Sei

மண்டிகளின் வருமானம், மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது – இடத்தை வாடகைக்கு விட மத்திய அரசு முடிவு

வேளாண் சட்டங்களில் நன்மைகளைப் பெறும் விதமாக, மத்திய அரசும்  மற்றும் மத்திய பிரதேச மாநில அரசும், மொத்த வேளான் சந்தைகள் அல்லது மண்டிகள் திறந்திருக்கும் என உறுதியளித்துள்ளது. இந்நிலையில், பெரிய இழப்பும், ஒரு நிச்சயமற்ற எதிர்காலமும் மத்திய பிரதேச மாநில வேளாண்மை வாரியத்திற்கு  ஏற்பட்டிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 88 கோடி ரூபாயாக  இருந்த வாரியத்தின் வருமானம், 66 விழுக்காடு அளவிற்கு குறைந்து, இந்த ஆண்டு ஜனவரியில் 29.26 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது என  அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மண்டிகளுக்கு வெளியே விவசாய பொருட்களை விற்பதை ஆதரிக்கும் மூன்று விவசாய சட்டங்களில் ஒன்றான, விவசாய பொருட்கள் வர்த்தகம் மற்றும் வாணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020 நிறைவேற்றப்பட்ட பிறகு இது நிகழ்ந்திருக்கிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

வருமானத்தைப் பெருக்கும் விதமாக, தனியார் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன், மண்டிகளுக்குள்ளே மருத்துவ கிளினிக்குகள், பெட்ரோல் விற்பனை நிலையம், வணிக வளாகங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில வேளாண்மை அமைச்சர், “நாங்கள் மண்டிகளை சிறந்த சந்தையாக மாற்றுவோம். மண்டிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை இரண்டும் தொடரும். விவசாயிகளுக்கு நல்ல சூழல் வழங்கும் விதமாக, வங்கி, பெட்ரோல் பங்கு, உரம் மற்றும் விதைகள் விற்கும் கடைகள் இருக்கும். குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ராணுவ கேண்டீன், மளிகை கடைகள் போன்றவை அமைக்கப்படும். விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கார்ட்களை வழங்குவோம், மண்டிகளின் வருமானமும் அதிகரிக்கும். நாங்கள் இவற்றைத் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்வோம்” எனக் கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

போராட்ட களத்தில் பூங்கா அமைத்த விவசாயிகள்: சட்டங்களைத் திரும்ப பெறாமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது – விவசாயிகள் திட்டவட்டம்

மத்திய பிரதேசத்தில் 259 மண்டிகள் மற்றும் 298 துணை மண்டிகள் இருப்பதாகவும், வேளாண் சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்வதற்கான வரி குறைக்கப்பட்டிருப்பதோடு, மண்டிகளுக்கு வெளியே விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டதால், சந்தைகள் புத்துயிர் பெற வாய்ப்பில்லையென மண்டி வாரிய  அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மண்டி வாரிய சங்கத்தின் தலைவர் பிபி பஜ்தூர், ”அரசின் இந்தத் திட்டம் முதல் தர 40 பெரிய  மண்டிகளில் மட்டுமே சாத்தியம், சிறிய மண்டிகளில் சாத்தியமில்லை. வருமானம் இல்லாமல் இருக்கும் சிறிய மண்டிகள அவர்கள் மூடுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.” எனக் கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அனைத்து மண்டிகளுக்கும் விவசாயிகள் வருவது குறைந்து வருகிறது, இந்தூரில் 4 விழுக்காடு முதல் ரேவாவில் 71 வழுக்காடு வரை மண்டிகளுக்கேற்ப இவை வேறுபடுகிறது. மொத்த உள்ள 259 மண்டிகளில் 47 மண்டிகளில் அக்டோபர் மாதத்தில் பூஜ்ஜிய வர்த்தகம் பதிவாகியுள்ள நிலையில் 143 மண்டிகளில் 50 முதல் 60 விழுக்காடு வரை, கடந்த ஆறு மாதங்களில் வர்த்தகம் குறைந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. பருவகாலங்களில் செயல்படும், 298 துணை மண்டிகளில் கடந்த ஆறு மாத காலமாகப் பூஜ்ய வியாபாரம் பதிவாகி இருப்பதால், அவை மூடப்படும் நிலையில்  இருக்கிறது.” எனத் தரவுகள் தெரிவிப்பதாக, அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கட்ட மக்களிடம் பணம் மோசடி – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

மண்டிகள் வாரியத்தை நம்பி 2,500 ஓய்வூதியதாரர்கள், 6,500 ஊழியர்கள் இருப்பதாகவும் மற்றும் 45 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட வியாபாரிகள் இருப்பதாகவும், வியாரிகளிடமிருந்து பெறப்படும் 1.5 விழுக்காடு வரியில், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க 1 விழுக்காடும், அரசாங்கத்திற்கு 0.5 விழுக்காடு செல்வதாக, என்டிடிவி தெரிவித்துள்ளது.

மண்டிகள் மூடப்படுகிறது என்ற குற்றஞ்சாட்டை மறுத்த மாநில முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ”மண்டிகள் செயல்படும் என்றும் எந்த மண்டியும் மூடப்படாது” என கூறியதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் அமைச்சரின் பதில் காங்கிரஸ் கட்சி ஏற்காத நிலையில், அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் பூபேந்திர குப்தா, அரசாங்கம் மண்டிகளை தனியார் மயமாக்க முயற்சிக்கிறதாகக் குற்றம் சாட்டியதோடு, ”47 மண்டிகள் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யமுடியவில்லை. இருப்பினும் அரசாங்கம் வணிக வளாகங்களைத் திறப்பதில் மும்மரமாக இருக்கிறது, அவர்களுக்கு நிலத்தின் மீதே கவனம் இருக்கிறது. பாஜக விவசாயிகளை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்ததாக, என்டிடிவி யில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்