Aran Sei

ஞாயிறு முதல் மீண்டும் இரவு நேர ஊரடங்கு – கொரோனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேசம் முடிவு

த்திய பிரதேசத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் இந்தூர் மற்றும் போபால் நகரங்களில், மீண்டும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவ்கான், அண்டை மாநிலமான மஹாராஷ்ட்ராவிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு விமானம் மற்றும் ரயில் மூலம் வருபவர்களுக்கு தெர்மல் பரிசோதனை செய்யப்படும் என்று கூறினார்.

அதேபோல், கொரோனா தொற்று அதிகம் பரவிவரும், இந்தூர் மற்றும் போபால் நகரங்களில், ஞாயிறு அல்லது திங்கட்கிழமை முதல், இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல் படுத்தப்படும் என்றும் கூறினார்.

மத்திய பிரதேசத்தில், நேற்று (மார்ச் 12) ஒரே நாளில் 603 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், இந்தூரில் மட்டும் 219 பேருக்கும், போபாலில் 138 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Source: The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்