Aran Sei

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரி – நோட்டீஸ் அனுப்ப மத்திய பிரதேச அரசு முடிவு

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானிற்கு மத்திய பிரதேச அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச பொதுப்பணித்துறையின் துணை செயலாளராக இருக்கும் நியாஸ் கான், கடந்த வாரம் அவரது ட்விட்டர் கணக்கில், இந்தியாவின் பல மாநிலங்களில் படுகொலை செய்யப்படும் இஸ்லாமியர்கள்குறித்து திரைப்படம் எடுக்குமாறு ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களை வலியுறுத்தியிருந்தார்.

மேலும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பூச்சிகள் அல்ல, அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் தான்” என தெரிவித்திருந்தார்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நிரோத்தம் மிஸ்ரா, “நியாஸ் கானின் ட்விட்டர் பதிவுகளைப் பார்த்தேன். அது ஒரு முக்கியமான பிரச்னை. அரசு அதிகாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பை அவர் மீறுகிறார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு மாநில அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் படுகொலை தொடர்பாக புத்தகம் எழுத இருப்பதாக தெரிவித்துள்ள நியாஸ் கான், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்று இஸ்லாமியர்களின் வலி மற்றும் வேதனையை இந்தியர்கள் முன் வைக்க யாராவது திரைப்படம் தயாரிக்க முன்வந்தால் இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்