Aran Sei

ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காணொளி: பகிர்ந்த அதிகாரியை கண்டித்து குழுவிலிருந்து நீக்கிய டிஜிபி

த்தியபிரதேச மாநிலத்தின் சிறப்புக் காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற மைதிலி ஷரன் குப்தா அவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவான ஐபிஎஸ் எம்பி குழுவில் ஒரு யூடியூப் சேனல் இணைப்பைப் பகிர்ந்திருந்தார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது தங்கள் முன்னோர்கள் இந்தியாவில் தங்கியிருப்பதாகக் கூறிய இஸ்லாமியர்களை இந்துக்கள் எதிர்க்கவேண்டும் என்று யூடியூப் சேனல் இணைப்பில் பேசப்பட்டிருந்தது.

“இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது முஸ்லீம் லீக்கிற்கு வாக்களித்தவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லாமல், இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் இஸ்லாமியர்களை இந்துக்களின் தலையில் உட்கார வைத்து விட்டனர். சட்டப்படி இஸ்லாமியர்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டன.”

“இதுவே அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம். இஸ்லாமியர்கள் கல்வி அமைச்சர்களாக ஆகி பிறகு நமது வரலாற்றையே மாற்றி விட்டார்கள்” என்று யூடியூப் இணைப்புடன் குப்தா பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வாட்ஸ்அப் குழுவில் அனைவரும் இந்த யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

குப்தா இந்த செய்தியைப் பதிவிட்ட பிறகு, தற்போதைய மாநில காவல் ஆணையரான ஜோஹ்ரி அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு பதிவிட்டார். அதில் “இதுபோன்ற அரசியல்/வகுப்புவாத செய்திகள் இந்தக் குழுவில் பகிரக் கூடாது. ஆகவே தயவு செய்து இதனை நீக்குங்கள்” என்று கோரிக்கை வைத்தார். ஆனால் குப்தா அதற்கு மறுத்துவிட்டார்.

“மதவாத பதிவை நீக்க குப்தா தயாராக இல்லை எனும்போது அவர் இந்த குழுவில் இருக்க வேண்டியதில்லை” என்று கூறி குப்தாவை அந்த குழுவில் இருந்து ஜோஹ்ரி நீக்கினார்.

Source : Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்