Aran Sei

சாதிமாறி காதலித்ததால் ஒருவர் கொலை – தலையைக் கொய்து பெண்ணின் சகோதரன் வெறிச்செயல்

த்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் தனது சகோதரியைக் காதலித்த மாற்று சாதியைச் சேர்ந்தவரின் தலையைத் துண்டித்துக் காவல் நிலையத்திற்கு ஒருவர் கொண்டு வந்துள்ளார்  என்று  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

22 வயதான குற்றவாளி தீரஜ் சுக்லா, ஒரு கையில் துண்டிக்கப்பட்ட தலையையும், மறுகையில் கோடரியையும் எடுத்துக்கொண்டு, வழியெங்கும் ரத்தத்தைச் சொட்டவிட்டப்படி காவல்நிலையப் படியேறியதைக் கண்டு தில்வாரா காட் காவல் நிலைய காவலர்கள் அதிர்ச்சியடைந்து போனதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நிலத்தை அபகரிக்க உயர்சாதியினர் முயற்சி – எதிர்ப்பு தெரிவித்ததால் கொல்லப்பட்ட தலித் செயல்பாட்டாளர்

மேலும், “பலியான பிரிஜேஷ் பர்மன் 35 வயதுடையவர். ராமங்கரா கிராமத்தில் வசிப்பவர். அவரும் சுக்லாவின் சகோதரியும் காதலித்து வந்துள்ளனர். சுக்லாவின் குடும்பத்தினரின் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். காணாமல் போன சுக்லாவின் சகோதரியை மீட்டுத்தர கோரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, இருவரையும் கண்டுபிடித்து, அவர்களின் குடும்பங்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.” என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு உள்ளூர் விளையாட்டு போட்டிகளின்போது, பார்மனும் சுக்லாவும் பலமுறை மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று கிராமவாசிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரையில் சாதி வன்மத்தோடு காவல்துறையினர் தாக்கியதாக புகார் – வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி போராட்டம்

தன் சகோதரியின் காதல் மீதான சுக்லாவின் கோபம் உச்சமடைந்ததை அடுத்து, சுக்லா பார்மனை வயல் வழியாக துரத்திச் சென்று, ஒரு மரத்தின் கீழ் வீழவைத்து, தலையைக் கோடாரியில் கொய்து, அத்தோடு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர்மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்