Aran Sei

‘மத மாற்றத்திற்கு எதிரான சட்டம்’ – மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்

Image Credits: National Herald

த சுதந்திர சட்ட மசோதா 2020 க்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

“இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், மோசடியாகவோ, மயக்கியோ அல்லது அச்சுறுத்தலின் பெயரிலோ மேற்கொள்ளப்படும் மத மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இம்மசோதா சட்டமான பின் இது நாட்டிலேயே மத மாற்றத்திற்கு எதிராக மிகக் கடுமையான சட்டமாக இருக்கும்” என்றும் அவர்  கூறியுள்ளார்.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த மசோதா இப்போது மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.”இந்த மசோதா 1968-ம் ஆண்டின் மத சுதந்திரச் சட்டத்தை மாற்றி அமைக்கும் (மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு)” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு நபரை மதம் மாற்றுவதற்கான நோக்கத்திற்காக மட்டுமே திருமணம் செய்துகொண்டால் இந்த முன்மொழியப்பட்ட சட்ட விதிகளின் கீழ் அத்திருமணம் செல்லாததாகக் கருதப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

‘லவ் ஜிகாத் வழக்கு : நிரூபிக்க ஆதாரம் இல்லை’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்

“மதமாற்றம் செய்ய விரும்புவோர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாவட்ட நீதிபதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஒரு ஏற்படு செய்யப்பட்டுள்ளது” எனவும் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

முன்னதாக, இதனை தடுக்கும் வகையில் உத்தர பிரதேச அரசுச் சட்டம் இயற்றியது. இது ‘சட்டவிரோத மதமாற்ற தடுப்பு சட்டம் 2020’ என அழைக்கப் படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் பலர் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்