மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சட்டக் கல்லூரி நூலகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான புத்தகம் இருந்ததற்காக அதன் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் கல்லூரி முதல்வர் உள்பட 4 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
சட்டக்கல்லூரி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் இந்தப் புத்தகத்தில், ஆர்எஸ்எஸ்க்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) குற்றம் சாட்டுகிறது.
ஏபிவிபி பிரிவின் தலைவர் திபேந்திர சிங் தாக்கூர் கூறுகையில், “டாக்டர். பர்ஹத் கானின் “குழு வன்முறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு” என்ற புத்தகத்தில், இந்து சமூகம், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், துர்கா வாஹினி போன்ற அமைப்புகளுக்கு எதிராக மிகவும் ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
ஏபிவிபி அமைப்பினர் இந்த புத்தகத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சட்டக் கல்லூரியில் முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் நூலகத்திலிருந்து அந்த புத்தகத்தை அவசர அவசரமாக அகற்றியுள்ளது. இதனிடையே, சர்ச்சை தீவிரமடைந்ததால், கல்லூரி முதல்வர் டாக்டர் ஏனாமுர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “குழு வன்முறை மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு” என்ற தலைப்பில் நூலகத்தில் புத்தகம் இருந்ததற்காக அதன் ஆசிரியர் டாக்டர் பர்ஹத் கான், அமர் லா பப்ளிகேஷன்ஸின் ஹிதேஷ் கேத்ரபால், கல்லூரி முதல்வர் டாக்டர் இனாமூர் ரஹ்மான், கல்லூரி பேராசிரியரான மிர்சா மோஜிஸ் பெய்க் ஆகியோர் மீது ஏபிவிபி மாணவர்களின் புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.
Source : the print
ரெட்டியா? சம்சாக்குள்ள ரொட்டியா? | பயத்தில் தெறித்து ஓட்டம் | Aransei Roast | amar prasad reddy
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.