Aran Sei

மத்திய பிரதேசம்: மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி 2 பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள் – 9 பேர் கைது

த்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு இரு பழங்குடியினரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். .

இச்சம்பவத்தில் 15 முதல் 20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இருப்பதாக  காங்கிரஸ்  கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மாநிலத்தில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசம்: இரண்டு பழங்குடிகளைக் கொன்ற பசுக் காவலர்கள்

“இந்தச் சம்பவம் நேற்று (மே- 5) அதிகாலை 2:30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடந்துள்ளது. இது தொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங் ககோடியா தலைமையிலான குழு ஜபல்பூர்-நாக்பூர் நெடுஞ்சாலையில் போராடியுள்ளது.

15 முதல் 20 பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்று, அந்தப் பழங்குடியினர் ஒரு மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி அவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளார் மற்றுமொருவர் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை இன்னும் நடத்தப்படவில்லை,” என்று காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.கே.மரவி பிடிஐயிடம் தெரிவித்திருந்தார்.

கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது. “மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் சுமார் 12 கிலோ இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என்று எஸ்.கே.மரவி கூறியிருந்தார்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம், ராமர், பரசுராமர் – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு

சம்பவத்தில் காயமடைந்த பிரஜேஷ் பாட்டி கூறுகையில், சாகர் பகுதியைச் சேர்ந்த சம்பத் பாட்டி மற்றும் சிமாரியாவைச் சேர்ந்த தன்சா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தபோது ஒரு கும்பல் அவர்களை தடிகளால் தாக்கியதாகவும், அவரும் தாக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  ககோடியா கூறும் போது, “தாக்குதல் நடத்தியவர்கள் பஜ்ரங் தள் உறுப்பினர்கள்; வலதுசாரி அமைப்பை தடை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் ககோடியா வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இரண்டு பழங்குடிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில் ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில், ஷேர் சிங் ரத்தோர் (28), அஜய் சாஹு (27), வேதாந்த் சௌஹான் (18), தீபக் அவதியா (38), பசந்த் ரகுவன்ஷி (32), ரகுநந்தன் ரகுவன்ஷி (20) உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சாத்தான்குளம் கொலை வழக்கு: ‘என்னை தவிர மற்ற 8 பேருமே கொலை செய்தனர்’ – நீதிபதிக்கு முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கடிதம்

மேலும், அன்ஷுல் சௌராசியா (22), சிவராஜ் ரகுவன்ஷி (23), ரின்கு பால் (30) ஆகிய மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய பிறரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Source: ndtv

தோத்துப்போன பாஜக அலறும் கங்கை அமரன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்