Aran Sei

மதுரையில் எய்ம்ஸ் கட்ட ஜப்பான் அரசிடம் கடன் பெறும் இந்தியா: அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் கையெழுத்தானது எப்படி? – சு.வெங்கடேசன் கேள்வி

துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஜப்பான் அரசுடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்.பாண்டியராஜன் என்ற சமூக செயல்பாட்டாளர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மனுவினால் இந்தத் தகவல் வெளியாகி இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயத்ரி மந்திரம் ஓதினால் கொரோனா குறையுமா? – மத்திய அரசின் நிதியுதவியோடு ஆய்வு மேற்கொள்ளும் எய்ம்ஸ்

மேலும், மத்திய சுகாதார அமைச்சகமும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இந்தக் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும், விரைவில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும்தி இந்து செய்தி கூறுகிறது.

கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். ஆயினும் இந்தக் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகததால் இன்று வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

2015 பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: செங்கல்லை கூட வைக்காத மத்திய அரசு – பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 2 அன்று மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விரைவில் எய்ம்ஸ் கட்டப்படும் என்றும், சிறப்பு நோய் தடுப்பு பிரிவு கட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசால் எய்ம்ஸ் கட்ட 1200 கோடி ரூபாய் நிதி கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பிரதமர் பிரச்சாரத்தின்போது அறிவித்த நோய் தடுப்பு பிரிவினால் கணக்கிடப்பட்ட நிதி சுமார் 2000 கோடியாக உயரும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

மதுரை எய்ம்ஸ்கான பெரும்போராட்டத்துக்கு மக்கள் தயாராகவேண்டும் – சு.வெங்கடேசன்

இது குறித்து கேள்வியெழுப்பியுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் , “எய்ம்ஸ் கட்டப்பட உயர்த்தப்பட்ட பட்ஜெட் சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு பெறப்படாத நிலையில் எவ்வாறு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?” என்று கேள்வியெழுப்பியுள்ளதாகதி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்