Aran Sei

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

கவத் கீதை, ராமாயணம் ஆகியவற்றை கட்டாய பாடமாக அறிவித்திருக்கும் தேசிய திறந்த நிலை பள்ளிகளுக்கான நிறுவனத்தின் (என்.ஐ.ஓ.எஸ்) முடிவிற்கு, உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 100 தன்னாட்சி அதிகாரம் பெற்ற மதராஸாக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் (NEP) பண்டைய இந்திய அறிவு மற்றும் பாரம்பரியம் குறித்தபாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மதராசாக்களுக்கு இந்த விதியை என்ஐஓஎஸ் கட்டாயமாக்கியுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்.ஐ.ஓ.எஸின் புதிய பாடத்திட்டத்தை இஸ்லாமிய மதகுருக்கள் ஏற்க மறுப்பதோடு, மதராஸாக்களின் கல்வித்திட்டத்தில் தலையிட என்.ஐ.ஓ.எஸிற்கு அதிகாரமில்லை என நம்புறோம் என தெரிவித்துள்ளதாக, அச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் கொரோனா பரப்பிய பாஜகவின் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

லக்னோவில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான மதராஸாவின் தலைவர் நசீம், அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரான மௌலானா காலீத் ரசீத் ஆகியோர், மதராஸாக்கள் நிறுவியதன் நோக்கம் இஸ்லாமிய கல்வியை வழங்குவதே ஆகும் என தெரிவித்துள்ளதாக, தி வயர் கூறியுள்ளது.

”இந்தியாவில் மதராஸா வாரியத்தால் நடத்தப்படும் பள்ளிகள் (islamic school), தன்னாட்சி மதராஸா பள்ளிகள் என இரண்டு வகை பள்ளிகள் இருக்கும் நிலையில், வாரியத்தின் முடிவு அதன் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற மதராஸா பள்ளிகள் தங்கள் முடிவை சுயமாக எடுக்க முடியும்” என ரசீத் கூறியிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் தினத்தில் ஒன்றிணையும் 40,000 பெண்கள்:   விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி நோக்கி பேரணி

தன்னாட்சி மதராஸாக்களுக்கு உத்தரவு வழங்கும் அதிகாரம் கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் என்.ஐ.ஒ.எஸ் அமைப்புக்கு இல்லை என அவர் தெரிவித்திருபப்தாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் பகவத் கீதை, ராமாயணத்தை அறிமுகப்படுத்தும் என்.ஐ.ஓ.எஸ் முடிவை எதிர்த்திருக்கும் மற்றொரு மதகுருவான மௌலானா யாசூப் அப்பாஸ், ”மதராஸாக்களில் கீதை ராமாயணத்தை பாடமாக்கும் என்.ஐ.ஓ.எஸ், ஆர்.எஸ்.எஸ் நடத்தும் கல்வி நிறுவனங்களில் ஏன் குரானை அறிமுகப்படுத்தவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளதாக, அதில் தி வயர் கூறியுள்ளது.

மதராஸா சுல்தான் அல் மதாரிஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினரான மெளலானா யாசூப் அப்பாஸ், மதரஸாக்கள் மீது யாரேனும் எதையாவது திணிக்க முயன்றால், இஸ்லாமிய சமூகம் அதற்கு எதிராக போராடும் என கூறியதாக அதில் தெரிவித்துள்ளது.

டெல்லி கலவரம் – முஸ்லீம்களை தாக்க கலவரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா?

“இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாகப் போரிட்டனர். ஆனால் சிலர் மொழி மற்றும் மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கின்றனர்,” என அவர் தெரிவித்திருப்பதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊடகத் தகவல்களின்படி, தொடக்கக் கல்வி 3, 5, 8 வகுப்புகளுக்கு இணையான 15 பாடப்பிரிவுகளை என்.ஐ.ஓ.எஸ் தயாரித்திருப்பதாகவும், ’பாரதிய ஞான பரம்பர’ (பண்டைய இந்திய அறிவு) என்ற பாடத்திட்டத்தில் ராமாயணம், பகவத் கீதை, வேதங்கள், யோகா, அறிவியல், தொழில் திறன்கள், சமஸ்கிருதம் மற்றும் பாணினியால் முன்மொழியப்பட்ட மகேஸ்வர சூத்திரங்கள் போன்ற போதனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தி வயர் தெரிவித்துள்ளது.

இந்தப் பாடத்திட்டத்தை 100 மதராஸாக்களுக்கு முதலில் அறிமுகப்படுத்தி, பின்னர் 500 மதராஸாக்களுக்கு எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிப்பதாக, தி வயர் கூறியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்