மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தைத் திமுக தொண்டர்கள் தாக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும். மேலும் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகத் துறையினருக்கு முன்களப் பணியாளர் உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும் : மு.க.ஸ்டாலின்
மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தைச் சில திமுக தொண்டர்கள் தாக்கி அங்குள்ள பெயர் பலகைகளையும் நீக்கியுள்ளார்.
மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்… pic.twitter.com/8FjmbSzTgS
— Subramanian.Ma (@Subramanian_ma) May 4, 2021
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.