Aran Sei

கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் நம் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று(4/5/2021) மாநில சுகாதாரத்துறை செயலர், வருவாய்த்துறை செயலாளர், காவல்துறை துறை ஆகிய உயரதிகாரிகளுடன் நடந்த கூட்டத்திற்கு பின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘அம்மா உணவகத்தைத் சேதப்படுத்திய திமுகவினர்’ – சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் கட்சியிலிருந்து நீக்கவும் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் வரும் மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்தக் கூட்டத்தில் படுக்கை வசதி, ஆக்சிஜன் இருப்பு, மருத்துவர்கள் இருப்பு ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்கவும்; முகக்கவசம் அணியவும்! அரசு அறிவித்துள்ள #COVID19 தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்பட்டால் நம் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியும். நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத் துறையினருக்கு முன்களப் பணியாளர் உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும் : மு.க.ஸ்டாலின்

மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,”நோய் பரவாமல் தடுத்தல் – தொற்றுக்குள்ளானவர்களைக் காப்பாற்றுதல் ஆகிய இரு குறிக்கோள்களைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் எனக் கருதாமல் மக்கள் தங்களின் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும். அரசும் மக்களும் இணைந்து #COVID19-ஐ வெல்வோம்! ” என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்