Aran Sei

பொய் சொல்வது பாஜகவின் கலாச்சாரம்: இந்துத்துவா என்ற பெயரில் மதவாதத்தை முன்வைப்பவர்களை பார்த்தால் கோபம் வருகிறது – சித்தராமையா

ந்துத்துவா என்ற பெயரில் பொய் சொல்பவர்களையும், மதவாதத்தை முன்வைப்பவர்களையும் பார்த்தால் கோபம் வருகிறது என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

உடுப்பியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேருந்து யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய சித்தராமையா, “கர்நாடகாவின் கடலோர பகுதி இந்துத்துவாவின் ஆய்வுக்கூடம். பொய் சொல்வது பாஜகவின் கலாச்சாரம். பயங்கரவாதத்தை நாங்கள் எப்போதும் எதிர்க்கிறோம். பயங்கரவாதிகள் கடுமையான தண்டிக்கப்பட வேண்டும். இந்துத்துவா என்ற பெயரில் பொய் சொல்பவர்களையும், மதவாதத்தை முன்வைப்பவர்களையும் பார்த்தால் கோபம் வருகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். எங்களுக்கு அனைவரும் சமம் தான்.

உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா – வெளிநாடுகளிலும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவினர்

இந்துவும், இந்துத்வாவும் முற்றிலும் வேறுபட்டவை. இந்துத்துவா வார்த்தையை கண்டுபிடித்தவர் சாவர்க்கர். பாஜகவுக்கு வளர்ச்சியில் நம்பிக்கை இல்லை. வளர்ச்சி பற்றி பேச வேண்டாம், லவ் ஜிகாத் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று நளின்குமார் கட்டீல் கூறி உள்ளார். ஏழை மக்களின் வளர்ச்சியில் பாஜகவுக்கு அக்கறை இல்லை. பாஜக ஆட்சியிலிருந்தால் கடலோர பகுதி மட்டுமின்றி கர்நாடகம், ஏன் இந்தியா முழுவதும் வளர்ச்சி அடையாது. பாஜகவின் மனநிலையை மக்கள் அறிந்துள்ளனர்.

மோடி இந்தியாவின் பிரதமர். அவா் எப்போது வேண்டுமானாலும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்யலாம். ஆனால் அவர் பாஜகவை கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்று சொன்னால் அது சாத்தியமற்றது. மோடி, அமித்ஷா 100 முறை வந்தாலும் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முடியாது. பாஜகவால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

விநாயக் சதுர்வேதி எழுதிய இந்துத்துவா மற்றும் வன்முறை என்ற புத்தகம்: இந்துத்துவாவின் தத்துவ கர்த்தா சாவர்க்கரை புரிந்து கொள்வது எப்படி?

மேற்கு வங்களாத்திலும் மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து பிரசாரம் செய்தனர். அங்கு அவர்களுக்கு என்ன ஆனது. அதே கதி தான் கர்நாடகத்திலும் ஏற்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Source : deccanherald

Bigg Boss 16 | Vikraman wins Hearts, Azeem wins Trophy | Kamal Hassan |VCK Thirumavalavan @U2Brutus

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்