Aran Sei

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை வெளியேற சொன்ன மருத்துவமனை – வேறொரு மருத்துவமனைக்கு இடம்பெயர உத்தரவு

த்தரபிரதேச மாநிலம் லக்னோவில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பு இல்லாததால் இரண்டு மருத்துவமனைகள் அங்குள்ள நோயாளிகளை வேறொரு மருத்துவமனைக்கு இடம்பெயரச் சொல்லியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளால் பாதிக்கப்படும் மின்மயான ஊழியர்கள் – லக்னோவில் ஓய்வின்றி 19 மணிநேரம் உழைக்கும் அவலம்

மேலும், இந்த இரண்டு மருத்துவமனைகளின் வாகனங்களும் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் முன் காத்துக்கிடப்பதாகவும், நேற்று ஒரு மருத்துவமனை நிர்வாகம் 40 சிலிண்டர்களை பெற்றிருந்த நிலையிலும் இவ்வாறு அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

லக்னோவில் செயல்பட்டுவரும் மாயோ மெடிக்கல் சென்டர், மேக்வெல் ஆகிய மருத்துவ மனைகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 160 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் போதிய ஆக்சிஜன் வசதி இல்லாததால் இந்த இரண்டு மருத்துவமனைகளும் தங்களது நோயாளிகளை வேறொரு மருத்துவமனைக்கு இடம்பெயர உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா தடுப்பூசி தொற்றை தடுக்காது; ஆனால், உங்கள் உயிரை காக்கும் ’ – டெல்லி எய்ம்ஸ் இயக்குனர்

மாயோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உத்தரபிரதேச முதலமைச்சர் மற்றும் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டும் போதிய அளவில் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவில்லை” என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று – பாஜக தலைவர்கள் சமீபத்தில் சொன்ன, ஆனால் சொல்லியிருக்கக் கூடாத கருத்துக்கள்

இதுகுறித்து தெரிவித்துள்ள உத்தரபிரதேச அரசு, அடுத்த 36 மணிநேரத்திற்குள் மருத்துவமனைகளில் போதிய அளவில் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்